தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”
(தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் – தொடர்ச்சி) “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்” இடையன்குடியின் பழங்குடிகளான நாடார்கள், அவர்களின் பனையேறும் தொழில், அவர்கள் வாழ்ந்த குடிசைகள்… இவை எல்லாவற்றையும் பற்றி இரா.பி. சேதுப்பிள்ளை எழுதுவதைப் படித்த பின்… இன்றைக்குள்ள இடையன்குடியைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. “இத்தகைய செம்மணற்பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிளந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியினில் கற்பகத்தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில்…