தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு!
தமிழ் மீனவர்கள் ஐவருக்குத் தூக்கு! காரணமானவர்களை அரசியலிலிருந்து தூக்கு! இலங்கையில் பண்டாரநாயக்கா தலைமையாளராக(தலைமைஅமைச்சராக) இருந்தபொழுது 1956 ஆம்ஆண்டில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் அவர் படுகொலைசெய்யப்பட்ட பின்பு,1959இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்,1978 இல் ஐக்கியத் தேசியக்கட்சி அரசாங்கத்தில் இதற்குப் பல வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தூக்குத்தண்டனை அல்லது மரணத்தண்டனை என்பது ஏட்டளவில்தான் உள்ளது. இதனால் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் மரணத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களும் ஆயுள்தண்டனைபோல் சிறைவாசியில் தங்கள்வாழ்வைக் கழிக்கின்றனர். சிங்களக் கொடுங்கோல் அரசு சிங்களர்க்கான…
சோகத்தில் மூழ்கிய மீனவஊர்கள்: ‘500 உயிர்களைக் கொடுப்போம்’ எனச் சூளுரை
மீனவர் ஐவர் தூக்கு – மக்கள் கிளர்ச்சி தங்கச்சிமடம் : இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவஊர்கள் சோகமயமாகி உள்ளன. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரைப் பறிக்க இலங்கை அரசு துடிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ‘500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்’ எனச் சூளுரைத்தனர். கடந்த 2011 இல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஃச்டசு, வில்சன், பிரசாத்து,…