ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
விரைவாக நடைபெறும் சமற்கிருதத் திணிப்பு! மெல்லவும் விழிக்காத தமிழ் மக்கள்! ஐ.நா.வின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஆக்குக! பாரதிய மக்கள்(சனதாக்) கட்சியும் பேராய(காங்கிரசு)க் கட்சியும் இந்தித்திணிப்பிலும் சமற்கிருதத் திணிப்பிலும் ஒற்றுமை உள்ளவை. பேராயக்கட்சி மெல்லத்திணிப்பதுபோல் நடிக்கும். பா.ச.க.விற்கு அந்த நடிப்பு பிடிக்காது. ஆனால், வேறொரு வேற்றுமை உண்டு. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என இந்துமதத்தைத்திணிப்பதிலும் பாசக கவனம் செலுத்தும். நம் நாட்டில் இந்தியையைும் சமற்கிருதத்தையும் திணித்துத் திணித்துச் சலிப்பு ஏற்பட்டு விட்டது பா.ச.க.விற்கு. எனவே, உலக…