தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்  நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…

ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்

ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015  மாலை 5.00 சென்னை   ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…

பன்னாட்டு ஏதிலியர் நாள் (World Refugee Day 20-06-2015) – ஈழம் இரஞ்சன்

பன்னாட்டு ஏதிலியர் நாள்    வீடு இல்லை… நாடு இல்லை…விதிவிட்ட வழியா? இன்றைய நாட்களில் உலகில் 7.6 பேராயிரம்(மில்லியன்) மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும். இருப்பிடமற்று உலகமெங்கும் ஏதிலிகளாக ஈழத்துமக்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அண்மையில் ஐ.நா வெளியிட்ட சில தகவல்கள் உலகின் கையறு அரசியல் நிலையைக் காட்டுகின்றது.   7.6 பேராயிரம் மக்கள் ஏதிலிகளாகப் பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடுவதுடன், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகுதியானஅளவு   ஏதிலிகள் எண்ணிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் ஏதிலியருக்கான…

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ஐ.நா சிறப்புத் தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்- மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கைக்கிணங்கப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.”என்று, ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நேற்று கொழும்பு தாசு சமுத்திரா உறைவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.நா. சிறப்பு…

ஈழப்படுகொலைகள் தொடர்பில் சான்றுகள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விப் படிவங்கள்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்….

அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு

     ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன. அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன். சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை…

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்,  ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான  வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர்  செயலலிதா பேசியது: “இலங்கைத் தமிழர்கள்  சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில்  பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும். இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை…