குன்றியாளும் பிறரும் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 22 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 21. தொடர்ச்சி) 12.குன்றியாள் குன்றியனார், குன்றியன் (குறுந்தொகை 51) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வந்தது. இவர் பாடியது குறுந்தொகையில் 50-ஆம் பாட்டாகும். இவர் குன்றியனார் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்றார். — 13. வருமுலையாரித்தி இவர், பெயர்க்கண் உள்ள வருமுலை யென்னும் அடையாற் பெண்பாலராகக் கருதப்படுகின்றார். இவர்பாடியது குறுந்தொகையில் 176-ஆம் பாட்டாகும். அஃதாவது, ‘ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்னன்னர் நெஞ்ச நெகிழ்ந்த…