தமிழ்ப் புதுவை மாநிலம் உருவாக்குக! புதுச்சேரி அல்லது பாண்டிச்சேரி எனப்படும் ஒன்றியப்பகுதிக்கு மாநிலத் தகுதி வழங்கப்பெட வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. குடியரசுத்தலைவர் என்ற பெயரில் பாசக முகவராகக் கிரண்(பேடி) வந்ததிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களிடமும் தன்னுரிமையுடன் வாழப் புதுவைக்கு மாநிலத் தகுதி வேண்டும் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. இந்தியாவில் மாநிலங்களுடன்  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்றியப்பகுதிகளும் உள்ளன. இப்போது இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள். சண்டீகர், ததுரா – நாகர் அவேலி(Dadra and Nagar Haveli), தையூ-தாமன்(Daman…