இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று. “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…