திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்
(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம். 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ? 212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே. 213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…