தோழர் தியாகு எழுதுகிறார் 17 : ஏ. எம். கே. நினைவாக (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 16 : ஏ. எம். கே. நினைவாக (1) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (2) கறுப்பும் வெள்ளையும் கடலூர் மத்தியச் சிறையானது பரப்பிலும் கொள்திறனிலும் சிறியதே என்றாலும், மிகப் பழமையான சிறைகளில் ஒன்று. அது கடலூர் நகரத்திலிருந்து சுமார் ஐந்து அயிரைப்பேரடி ( கிலோ மீட்டர்) தொலைவில், வண்டிப்பாளையம் கிராமத்தில், கேப்பர் குவாரி என்னும் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. ஆகவேதான் வண்டிப் பாளையம் சிறை, கேப்பர் குவாரி சிறை என்ற செல்லப் பெயர்களும் அதற்கு உண்டு….