பூங்கொடி 7 – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக
(பூங்கொடி 6 – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’ என்னுமிவ்…