(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல்   ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,       தெற்(று)என்க, மன்னவன் கண்.         உளவும், உளவியல் நூல்தெளிவும்         ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.   எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்       வல்அறிதல், வேந்தன் தொழில்.         எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,         ஆட்சியான் உளவால் ஆராய்க.   ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்      …