இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும் 01
1. குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி முருகன் தனது எண்ணங்களை நூலாக ஆக்கி உள்ளார். இதழாளர் பா.ஏகலைவன் இந்த நூலைத் தொகுத்து எழுதியுள்ளார். நவம்பர் 24-ஆம் நாள் சென்னையில் இந்த நூல் வெளியிடப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் எண்ணங்களை இந்த நூலில் நளினி சொல்லி இருக்கிறார். திகைப்பூட்டும் தகவல்கள் பல முதன்முறையாக வெளிவந்துள்ளன. அவற்றில் சில பகுதிகள் மட்டும் இங்கே! இருட்டறையில் இருந்து!…