இன்று(கார்த்திகை 05, 2053 / 21.11.2022) இரவு 7.50 மணிக்கு தாமரைத்திரு, கலமாமணி, நாவரசர் ஒளவை இயற்கை எய்தினார். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்பு கொண்டிருந்த பெருமதிப்பிற்குரிய அண்ணல் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. நாவரசர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தனிப்பட்ட முறையிலும்இலக்குவனார் குடும்பத்தினர் சார்பாகவும் தமிழ்க்காப்புக் கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம், அகரமுதல மின்னிதழ், தமிழ்நாடு – புதுவை தமிழ் அமைப்புகள் ஆகியன சார்பாகவும்தெரிவிக்கிறோம். அறிஞர் ஒளவை குடும்பத்தார் தெரிவிக்கும் மறைவுச் செய்தி எந்தையும் இலமே ! ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார்…