சுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந்தரமூர்த்தி

  சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 16 மங்கையும் கங்கையும் சடைமே லிருக்கும், சனிநீரு முண்டாம் மடைமையுந் தண்ணளியாய் மண்டும் .- நடையழகாம் நானிலத்தில் நற்றமிழ்வாழ் நற்கங்கை வானிலவாள் மங்கைக்கே ஒப்பு . பொருள் 1) சிவன் சடைமேலிருந்து கங்கை வருகிறது பெண்களுக்கு கூந்தலில் போடப்பட்ட சடை தலைமேல் இருக்கிறது . 2) சனி நீர்  – ஊற்று நீர் கங்கையிலும் நீர் ஊற்று இருக்கிறது பெண்களின் கண்களிலும் நீர் ஊற்று இருக்கிறது . 3) கங்கை நீர் வெளிச்செல்ல மடைகள் உண்டு ….

சுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்தரமூர்த்தி

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 14 நங்கையும் நாணலும் கொண்டையதோ வெண்பூக்கள் கொண்டிருக்கும், நாடலுறும் கெண்டைகளும் உள்ளிருக்கக் கேள்வியெழும் –  பண்டையரின் பாவிருக்கும், பங்கமிலாப் பண்பிருக்கும், பெண்ணினத்தைக் காவிருக்கும் நாணலெனக் காட்டு . பொருள் – நங்கை பெண்கள் தலைவாரிக் கொண்டையிட்டுப் பெரும்பாலும் வெண்பூக்களைச் சூடிக் கொள்வார்கள். விரும்பத் தகுந்த புருவத்திற்குக் கீழே இமைகளின் காவற்கு உள்ளே கெண்டை மீனையொத்த கண்கள் பல கேள்விகளை அசைவில் கேட்கும். பண்டை இலக்கியங்களில் பெண்ணின் பெருமை போற்றாத புலவர்களே இல்லை. பெண் மென்மையானவள்;  நல்ல பண்பு நலன்களைக்…

தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி

தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி   தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ  கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் !   கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்