சங்கக்கால வாழ்த்துகள் சில!
வாணாள் வாழ்த்து பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5 அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7 அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8 நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9 மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10 ஆயிர வெள்ள ஊழி வாழி!…