அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே! நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால்…
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? – இலக்குவனார் திருவள்ளுவன்
முதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன்? கனவு கலைந்ததாலா? அதிமுகவில் பன்னீர் அணி உருவானதால், சசிகலாவிற்கான எதிர்ப்பு அலை கூடியது; அதிமுக ஆட்சிகவிழும்; தாலின் முதல்வராவார் என்ற பேச்சு உலவியது. ஆனால் திமுக செயல் தலைவர் தாலின் அதிமுக இயல்பாகக் கவிழ வேண்டும்; திமுகவின் முயற்சியால் கவிழ்ந்தால் மக்களின் நல்லெண்ணம் திமுகவிற்குக் கிட்டாது எனச்சொல்லி எந்தப் பிரிவிற்கும் சார்பாக இராமல் நடுநிலையாக இருந்தார். பன்னீர் செல்வம் ஆட்சி கவிழும் நிலை வரும், அப்பொழுது திமுக துணைநிற்கும் என்பதுபோன்ற பேச்சுகள் வந்தாலும்…
இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! – இலக்குவனார் திருவள்ளுவன்
இதற்குத்தானா தாழ்ச்சி செய்தீர் ஆளுநரே! தமிழ்நாட்டரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தை 23, 2048 / பிப்பிரவரி 5, 2017 அன்று தன் முதல்வர் பதவியைவிட்டு விலகி மடல் அளித்துள்ளார். அன்றே அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சியின் தலைவராக வி.கி.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய நாளில் தமிழ்நாட்டில்தான் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் இருந்துள்ளார். ஆனால், உடனே தில்லி பறந்துவிட்டார். மத்திய அதிகாரமையத்தால் மிரட்டப்பட்ட பன்னீர்செல்வம் கட்சியில் தான் மிரட்டப்பட்டதால் பதவி விலகியதாக அறிவித்தார். இதனால் தமிழ்நாடு குழப்பத்தைச் சந்தித்துள்ளது. பெரிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு முழுமையான ஆளுநரை…
பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! – இலக்குவனார் திருவள்ளுவன்
பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று! மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன. ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்…
புதிய அரசிற்கு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அரசிற்கு வாழ்த்துகள்! மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் இரு முறை [புரட்டாசி 05, 2032 – மாசி 17, 2033 (செட்டம்பர் 21, 2001 / மார்ச்சு 1, 2002); புரட்டாசி 11, 2045 – வைகாசி 08, 2046 (செட்டம்பர் 2 , 2014 – மே 22, 2015)] முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார். எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான்…
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! வரும் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்றுத் தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் வருவார் என ஆருடம் கூறவில்லை. இன்றைக்கும் அவர்தான் முதல்வர் எனத் தேர்தல் தளம் ஒன்று கூறுகிறது. தேர்தல் ஆணையர் அறிவிப்புகளை அறிவதற்காகத் தேர்தல் ஆணையத் தளத்தைப் பார்வையிட முயன்றும் வழக்கம்போல் இயலவில்லை. பல முறை முயன்றாலும் ஒருமுறைதான் தளத்தைப் பார்க்க இயலும். தேர்தல் ஆணையத் தளத்தின் நிலை இதுதான். எனவே, தனியார் தளம் (Elections.in – India’s 1st Elections website) ஒன்றில்…
கமலின் கருத்திற்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்!
இயற்கைப் பேரழிவு தொடர்பான கமலின் கருத்திற்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம்! நடிகர் கமல்ஃகாசன், இயற்கைப் பேரழிவு தொடர்பான கருத்தில் வரிப்பணங்கள் எங்கே செல்கின்றன எனக் கேட்டுத் தமிழக அரசைக் குறைகூறியிருந்தார். இதுகுறித்து நிதி – பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளார். கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்டமக்களைக் காப்பாற்றி, மீட்பு, துயர்துடைப்பு, சீரமைப்பு எனும் முப்பரிமானத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான…
தமிழக அரசின் வரிவிதிப்பில்லா மிகை வரவு நிதிநிலை அறிக்கை
திட்டச் செலவு 42 ஆயிரத்து 185 கோடி இலவசங்களுக்கு மட்டும் 48 ஆயிரம் கோடி அரசின் மதுவகை விற்பனை இலக்கு 2014-15 இல், (23 ஆயிரம் கோடி உரூபாயில் இருந்து)26 ஆயிரம் கோடி உரூபாயாக உயரும். தமிழக அரசின் 2013 – 2014ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை 13.02.14 அன்று சட்ட மன்றத்தில் தமிழகநிதியமைச்சர் பன்னீர்செல்வம் முன்வைத்தார். அவர் தெரிவித்த அறிவிப்புகள் சில:- . திட்டச் செலவினம் 170 ஆயிரம் கோடியை மிஞ்சும். ஊர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கு…