தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் : தீர்மானங்கள்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 1958-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழகப் புலவர் குழுவின் 107-ஆவது கூட்டம் பங்குனி 07, 2047 / மார்ச்சு 20, 2016 அன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தமிழகப் புலவர் குழுவின் 107ஆவது கூட்டம் – திருவில்லிப்புத்தூர் தீர்மானம் – 1 : நன்றியும் பாராட்டும் தமிழகப் புலவர் குழுவை அழைத்துச் சிறப்பித்து இந்த 107 -ஆவது கூட்டத்தைச் சிறப்புற அமைத்துத் தந்த கலசலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் முனைவர்.க.சிரீதரன் அவர்களுக்கு…