மாமூலனார் பாடல்கள் – 22 : சி.இலக்குவனார்
(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உஉ. “செய்வினை அவர்க்கே வாய்க்க” (தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி: அம்ம! உன்னுடைய அழகு முழுவதும் இன்று எங்கு மறைந்தது? உன்மேனி பசலை (தேமல்) படர்கின்றதே. எல்லாம் அவர் பிரிவினால் அல்லவா? தலைவி: ஆம் தோழி. என் செய்வது? தெருவில் உள்ளோரும், ஊரில் உள்ளோரும் பேசும் பேச்செல்லாம் நம்மைப்பற்றிதான். அவர்கள் உரையாடல்கள் சேரலாதன் முரசுபோல் முழங்குகின்றன. தோழி: கடல்நடுவே…