தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…