நச்செள்ளையாரும் பிறரும் – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 21 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 20. தொடர்ச்சி) 6. காக்கைபாடினியார் நச்செள்ளையார் [ மகாமகோபாத்தியாயர் பிரும்ம சிரீ முனைவர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் ‘நூலாசிரியர்கள் வரலாறு’ பார்க்க. ] இவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப்…
யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்
தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ. கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65
யாம் இரப்பவை – கடுவன் இளவெயினனார்
இறைவனிடம் வேண்டுபவை -பரிபாடல்