தமிழ்நாடும் மொழியும் 11 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 10 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கல்வி முறை சங்கக்காலக் கல்விமுறை மிகவும் சிறந்த முறையிலே அமைந்திருந்தது. சாதிமத பேதமின்றி ஆடவரும் பெண்டிரும் கல்வி கற்றிருந்தனர். இதனை வெண்ணிக்குயத்தியார் முதலிய பெண்டிர்தம் பாடல்கள் நன்கு தெளிவுறுத்தும். சங்ககாலத்திலே கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இருந்தது. கற்றுத் துறைபோய நற்றமிழ் வல்லார்க்குக் காவலனும் கவரி வீசினான்; கைகூப்பினான். ‘உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே………………………………………………………..அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்’ என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும்….
தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக…