இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் தமிழைக்காக்கவும் பரப்பவும் பல வகைகளில் போராடித் தம் வாழ்க்கையைச் செலவிட்டவர். அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் தட்டிக் கேட்டும் செயல்பட்டதுடன் அரசிற்குத் தமிழ் வாழவும் தமிழர் வாழவும் மக்களாட்சி நிலைக்கவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்; வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். தம் கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவுகள் இதழ்கள் மூலம் அவ்வப்பொழுது தக்க நெறியுரைகளைத் துணிந்து வழங்குவதில் முதலாமவராகத் திகழ்ந்துள்ளார். அவர் கூறும் அறிவுரைகள் அரசுகளுக்கு மட்டுமல்ல. அரசை நடத்தும் கட்சிகளுக்கும் அரசாள எண்ணும் கட்சிகளுக்கும்தான். பேரா.இலக்குவனாரின்…
மீண்டும் மீண்டும் கூட்டமொன்று வரும் வரும் – ஏர்வாடி இராதாகிருட்டிணன்
மீண்டும் மீண்டும் கொடிகளோடு கூட்டமொன்று வரும் வரும்- தாம் கொண்டு வந்த பரிசுகளைத் தரும் தரும் கால்களிலே கைகளிலே விழும் விழும்- நம் கதவு தட்டிக் கைவணங்கித் தொழும் தொழும் அவ்வப்போது கொள்கைகளை விடும் விடும் – அது அரசியலில் இயல்பென்று கதை விடும். ஐந்தாண்டுக் கொருமுறைதான் தேர்தல் வரும்-பாவம் அன்று நமது அறிவில் இடி விழும் விழும். தவறு செய்து விட்டதாகத் தெளிவு வரும்- அந்தத் தவற்றை மீண்டும் செய்ய அடுத்த தேர்தல் வரும்…. ஏர்வாடி இராதாகிருட்டிணன்
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….