(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும் – தொடர்ச்சி) கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் அந்த நேரத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் குழு(கமிட்டி) பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, ‘என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்’ என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.இரா. வரதராசனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. ‘குழுப் பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’ என்று அவர் கூறினார். ‘நீங்கள் யார்…