தமிழைக் கட்டாயமாக்குக!  மேடைதோறும் ‘தமிழ்! தமிழ்!’ என்று முழங்கிவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து வரும் அவல நிலையைச் சிறிதும் உணராமல் இருந்து வருகிறோம். இதிலிருந்து தமிழ்நாட்டை உடனடியாக மீட்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் அது யார் நடத்தும் பள்ளிக் கூடமாக இருந்தாலும், ‘கான்வெண்டாக’ இருந்தாலும் அவற்றில் எல்லாம் தமிழ்தான் பாடமொழியாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரைக் கட்டாயமாகத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் பாடம் நடத்தக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். இதற்காகத் தமிழ் நாட்டில்…