சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 13 உழவனும் ஆசானும் சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற் கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும் மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும் நல்லுழவர் ஆசானுக் கொப்பு . பொருள்: உழவன் 1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான். 2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான். 3) ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான். 4) வான் தருமழை போல் உலகிற்கு உணவு தருகிறான். 5) உலகிற்குச் சுவைதரு உணவுப்…
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி
தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் ! கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்