மின்னூல் : செல்வக் களஞ்சியமே -இரஞ்சனி நாராயணன்

செல்வக் களஞ்சியமே! இரஞ்சனி நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com குழந்தை வளர்ப்பு பட்டறிவுத் தொடரின் தொகுப்பு ஆசிரியர்: இரஞ்சனி நாராயணன் மின்னஞ்சல்: ranjanidoraiswamy@gmail.com மேலட்டை உருவாக்கம்: மனோசு குமார் மின்னஞ்சல்: socrates1857@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் மின்னஞ்சல் : Sivamurugan.perumal@gmail.com உரிமை – பொதுமைப்படைப்பு(Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.)  எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். முன்னுரை   எனது வலைப்பதிவில் மட்டுமே எழுதி வந்த நான், பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரை கொடுத்துவிட்டு வருவேன். அப்படி தொடர்ந்து நான் சென்ற தளம் நான்குபெண்கள்.காம். மாறுபாடாக ஏதாவது செய்யவேண்டும் என்ற…

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)     அரிமா அடலேறு சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க   வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும்…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 6.0. சொல்நுட்பத்தகவு  நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.      ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித்…