தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்” தொடர்ச்சி) திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை அன்பர் சிபி கேட்கிறார்… திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தாழி விடை: “திராவிடம் என்றால் என்ன?” என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன். ’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது,…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை. ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்- கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள் -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…
தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஆனி 02 / சூன் 16 கடைசி நாள் தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு)…
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…
பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி – ‘யாதுமாகி நின்றாள்’
வணக்கம். ‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி. காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள்/மாற்றுக்கருத்துகள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் எனப் பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு : 1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்?…
பனுவலின் அம்பேத்கர்பற்றிய தொடர் நிகழ்வுகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும் இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442 பங்குனி 15 / மார்ச்சு 29 ஞாயிறு : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி: அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா,…
உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்
உழவுக்கு வந்தனம் செய்வோம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன? உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு. அரசுவேலை வேண்டா…
பாடி மகிழ்வோம் பைந்தமிழில் – இலக்குவனார் திருவள்ளுவன்
பாடி மகிழ்வோம் பைந்தமிழில் உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே. எனவே, பிற அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்கிறது. ஆதலின்,,இசை, கூத்து ஆகிய மூன்றிலும் தாய்மைச் சிறப்புடன் இலங்குகிறது. இசைச் செல்வம் மிகுந்தது தமிழ் என்பதை மறந்து பிற மொழிகளில் பாடுவதையே பெருமையாகக் கொள்வது நமது பழக்கமாக உள்ளது. புலவர்களின் இசைப் பாடல்களைச் சிறு அகவையிலேயே நாம் சிறுவர் சிறுமியருக்குப் பயிற்றுவிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த அல்லது எளிமையான பாடல் மெட்டுகளில் பாடிப் பழகுவது தமிழ்ப் பாடல்களில் ஈடுபாட்டை ஏற்படுத்தும். எனவே, சில…
உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…
புரட்சியாளர்கள்- பேராசிரியர் சி.இலக்குவனார்
உலகில் அறியாமை மிகுந்து மூடக் கொள்கைகள் நிறைந்து அடிமை வாழ்வில் அல்லலுற்று உரிமையிழந்து உண்பதும் உறங்குவதுமே பெரிதெனக்கருதி வாழ்வின் உண்மைக் குறிக்கோளை மறந்து மானமிழந்து மக்கள் வாழுங்காலங்களில் எல்லாம் புரட்சியாளர்கள் தோன்றுகின்றார்கள். புரட்சியாளர்களால்தான் உலகம் செம்மை நிலையை நாடிச் செல்கின்றது. புரட்சியாளர் பட்டுண்டுலகம், அஃதின்றேல் மண்புக்கு மாய்வதுமன்’ என்று தான் கூறல் வேண்டும். சாக்ரிடீசு, இயேசு, மார்க்சு, உரூசோ, மகம்மது போன்ற வெளிநாட்டுப் புரட்சியாளர்களும், புத்தர், திருவள்ளுவர், கபிலர், சாந்தி போன்ற நம் நாட்டுப் புரட்சியாளர்களும் தோன்றியிராவிடின் மக்கள் நிலை மாக்கள் நிலையில்தான்…
தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ங : இலக்குவனார் திருவள்ளுவன்
‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர…
திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்
(ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…