மலைக்கவைக்கும் செல்லினம் செயலி!       ’செல்பேசி இல்லாதவர்கள், செல்லாதவர்கள்’ என்று ஆகிவிடும் போல உலகம் முழுவதும் நிலைமை மாறிவருகிறது. அலைபேசியின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காகத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் இடைவிடாது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகிறார், மலேசியாவைச் சேர்ந்த கணினிக் கணிய(மென்பொருள்) வல்லுநர், முத்து நெடுமாறன். தமிழில் இணையம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கணினித் தமிழ்த் துறையில் களம் இறங்கி, இன்று உலக அளவில் முன்னணி எழுத்துரு வல்லுநர்களில் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். அலைபேசிகளில்  தமிழைப் பயன்படுத்துவதற்கான…