கலைச்சொல் தெளிவோம் 41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari
41 : உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari காதி அல்லது கதர்-khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்) எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி-khadi/கதர் கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில்கட்டும் காப்புநூலைக் கைந்நூல் எனக் குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.) என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால் நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது. ஈரணி-two piece…