கண்ணகிக் கோவிலில் வழிபாட்டுரிமை – கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு வைகோ மடல்
கண்ணகிக் கோவிலில் வழிபட 3 நாள் இசைவு தருக! – வைகோ மடல் மங்கலதேவிக் கண்ணகிக் கோவில் வழிபாடு செய்யத் தமிழ்நாட்டு மக்கள் வரும் சித்திரைப் முழுநிலா(பௌர்ணமி) அன்று ஒரு நாளுக்கு மாறாக மூன்று நாட்கள் வழிபட இசைவளித்து (அனுமதித்து) உதவிட வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு மடல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டு எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் ஏறத்தாழ 6.6 புதுக்கல் (கி.மீ). தொலைவிலும், குமுளியிலிருந்து ஏறத்தாழ 14 புதுக்கல்…