துபாயில் கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா          கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்” என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் (மாணிக்கங்களால்) தொடுக்கப்பட்ட மாலையாக அமைந்தது.         முதலாவது மணி,   இளம் அகவையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் நிறைந்த செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்து- நம் தமிழன்னைக்கிட்ட…

கவியரசு கண்ணதாசன் விழா – சென்னை(வாணி மஃகால் – தியாகராயநகர்)

  ஆனி 06, 2046 சூன் 21, 2015 ஞாயிறு மாலை 6.00 கடந்த கால் நூற்றாண்டாக – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) கவியரசர் புகழ் பாடி வருகிறது.   இவ்வாண்டும் அழைப்பிதழில் உள்ளவாறு விழா நடைபெற உள்ளது. கவியன்பர்களும் திரையிசை அன்பர்களும் நண்பர்களுடன் வருமாறு வேண்டுகின்றோம். கவிஞர் காவிரிமைந்தன்  நிறுவனர் – பொதுச்செயலாளர்  கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்  பம்மல்,  சென்னை 600 075 தற்போது – அபுதாபி – அமீரகம்  00971 50 2519693 00971 50 4497052 kaviri2015@gmail.com  www.thamizhnadhi.com 

கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை

கவியரசர் கண்ணதாசன் விழா ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00   குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா   தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன்   குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா, எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028   சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் : “கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்” தொகுப்புரை : கவிஞர் காவிரி மைந்தன்     அன்புடன்…