101. வருண வரிசை தவறல்ல- ஆர்.வி.ஆர் என்பவர் 102.   பிற நாட்டார் சனாதனத்திற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். (பாண்டியன் பரிசு, இயல் : 56) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்கிறார் கண்ணதாசன் (கருப்புப்பணம் திரைப்படப்பாடல்) இவ்வாறு சாதி வேறுபாடற்ற பொருளுடைமைதானே நம் இலக்கு. இதன் அடிப்படையில் மிகச் சரியாகச் சுருக்கமாக இலக்கணமாகச் சனாதனம் குறித்து மு.க.தாலின் எடுத்துரைத்துள்ளார்.  வருண அடிப்படையில் இன்னார்க்கு…

67.சனாதனம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் அடையாளமாகும் – கண்ணதாசன் 68. இந்து தருமம் என்பதற்கு மிகவும் பொருத்தமான சொல் சனாதனம் 69. இந்து தருமம் மட்டுமே சனாதனம் – இராமகிருட்டிணர். இப்பொய்மையைக் காண்போம் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  யார் யாரையோ இணைப்பது அன்புதான்!  “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               – செம்புலப் பெயனீரார்               – குறுந்தொகை : பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்;…

நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்:  நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…

நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? : இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 6 பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தான்என் றெண்ணப் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை, 9 பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்?…

நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக : இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 5 நிலையில்லாச் செல்வததால் நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக! செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும் –நாலடியார், செல்வம் நிலையாமை, 8 பொருள்:  நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள  மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில்,…

நாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். பொருள்: முடி நரைத்து மூப்பு வரும் என்று இளமைப்பருவத்தில் கேடானவற்றைத் கைவிட்டவர்கள் நல்லறிவாளர்கள். குற்றம் நீங்காத நிலையில்லா இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பவர்கள், முதுமையில் துன்பத்துடன் ஊன்றுகோல் ஊன்றி நிற்பார்கள். சொல் விளக்கம்: நரை = மூப்பின் அடையாளமான வெண்முடி; வரும் என்று =வருமென்று; எண்ணி = நினைத்து; நல் = நல்ல; அறிவாளர் = அறிவுடையவர்கள்; குழவியிடத்தே = இளமைப் பருவத்தில்;…

புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.

தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும்  புதிய காலக்கட்டத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.        வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில்  ஆனி 10 / சூன் 24 இல் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதன் பிறந்த நாள் விழா, உலக இசை  நாள் ஆகிய முப்பெரும் விழாவில்,  தமிழ்த் திரையுலகில் வாழ்வின்  பொருள்மிக்க பாடல் வரிகளாலும், மனத்தை மீட்டும்  இசையாலும் புதிய  காலக்கட்டத்தைப் படைத்த  அருவினைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எசு.விசுவநாதனும் என்று கவிஞர்…

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00  இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு ” நானும் கண்ணதாசனும் “ உரை : திரு அமுதன்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு “இளைஞர் விரும்பும் இலக்கியம்” –    சரசுவதி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                          அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018      அனைரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in

கா.வேழவேந்தன் : கண்ணதாசன் கவிதைகள்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஆவணி 08, 2046, ஆகத்து 25, 2015 செவ்வாய் மாலை 6.00 தலைநிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் தொடர் சொற்பொழிவு 17 கவிவேந்தர் கா.வேழவேந்தன் ஆ.வீரமர்த்தினி

யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்

யானோர் காலக் கணிதம் கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்போன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரியென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்; ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்! வண்டா யெழுந்து மலர்களில்…