கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…
மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்
மழை பாதிப்பினால் மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற புகழ்மிகு எழுத்தாளர் விக்கிரமனின் இறுதிச் சடங்கு: சென்னையில் 4 நாள் அவதிக்குப் பிறகு எரியூட்டல் கடந்த 1-ஆம் நாள் புகழ்மிகு எழுத்தாளரும், ‘அமுதசுரபி’ இதழின் முன்னாள் ஆசிரியருமான விக்கிரமன் காலமானார். இவரது உடல், மழை வெள்ளம் காரணமாக உடலை பாதுக்காக்கும் உறைகலன் பேழை கிடைக்காமல், எரியூட்ட மயானம் கிடைக்காமல் 4 நாட்கள் கடும்அவதிக்குப் பிறகு 4- ஆம் நாள் நண்பகல் எரியூட்டப்பட்டது. ‘நந்திபுரத்து நாயகி’, ‘வந்தியத் தேவன் வாள்’ ‘இராசராசன் சபதம்’ முதலான புதினங்களை எழுதியவர்…
கண்ணன் வழிபாட்டைத் தமிழரிடம் இருந்து ஆரியர் கற்றனர் – சு.வித்தியானந்தன்
விட்டுணுவும் கண்ணனும் இதிகாசங்களிற் கண்ணன் விட்டுணுவின் ஓர் அவதாரமாகவும் ஒரு போர்வீரனாகவும் காட்சியளிக்கின்றான். அவனை ஒரு பெருந்தெய்வமாக அக்காலத்தில் மக்கள் கருதவில்லை. ஆரியர் தமிழரிடமிருந்தே கண்ணன் வழிபாட்டைப் பெற்றிருத்தல் வேண்டும். கண்ணன் உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த இடையர் குலத் தெய்வமே. ஆரியர் பொருளாதாரத்தில் இடையராக இருந்தபோதும் அவர்கள் நாடோடிகளே. மேலும் கண்ணன் கருமை நிறம் வாய்ந்த தெய்வமாக இருப்பதும் அவன் தமிழ்த் தெய்வம் என்று கொள்வதற்கு அறிகுறியா அமையும் எனலாம். கருமை நிற மனிதர் என்று பழைய காலத்தில் ஆரியர் திராவிடரைக்…