தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!

அன்னையிடம் சென்றாயோ நண்பா!   அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம்.   நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…

தமிழினியின் கவிதை

  சித்திரை 11, 2003 – ஆனி 01, 2046 : 23.04.1972 – 18.10.2015 போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கி தீர்த்திருந்த இரவின் கர்சனை பயங்கரமாயிருந்தது அம்பகாம பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தின் வனப்பை கடைவாயில் செருகிய வெற்றிலைக் குதப்பலாக சப்பிக்கொண்டிருந்தது யுத்தம். மீளாப் பயணம் சென்ற தோழி விடைபெற கை பற்றி திணித்துச் சென்ற கடதாசி…