தகப்பன் தாலாட்டு கண்ணுறங்கு கண்ணுறங்கு காவியமே கண்ணுறங்கு! களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! முன்னிருந்த தமிழர்நலம் மூத்தகுடி மொழியின்வளம் மண்ணுரிமை யாகஇங்கு மாறும்வரை கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) முப்பாட்டன் கடல்தாண்டி ஒர்குடையில் உலகாண்டான் இப்போது நமக்கென்று ஒர்நாடு இல்லையடி திக்கெட்டும் ஆண்டமொழி திக்கற்றுப் போனதடி இக்கட்டைப் போக்கணும்நீ இப்போது கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) தன்னலத்தில் தனையிழந்து தாய்மொழியின் புகழ்மறந்து பொன்னான தாய்நாட்டைப் போற்றிடவும் மறந்துவிட்டு இங்கிருக்கும் தமிழரெல்லாம் மையிருட்டில் வாழுகின்றார் ஈழமண்ணின் புதுவெளிச்சம் இங்குவரும் கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) ஆண்பிள்ளை வேண்டுமென்று…