திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 058. கண்ணோட்டம்
(அதிகாரம் 057. வெருவந்த செய்யாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 058. கண்ணோட்டம் உயிர்கள்மீது கண்களின் ஓட்டம், அதனால் விளையும் இரக்கம். கண்ணோட்டம் என்னும், கழிபெரும் காரிகை, உண்மையான், உண்(டு),இவ் உலகு. இரக்கம் என்னும், பேரழகுப் பண்பால்தான், உலகம் இருக்கிறது. 0572, கண்ணோட்டத்(து) உள்ள(து), உல(கு)இயல்; அஃ(து),இன்றேல், உண்மை நிலக்குப் பொறை. இரக்கத்தால் உலகுஇயல் உண்டு; இரக்கம்இலான் பூமிக்குச் சுமை. . பண்என்ஆம்? பாடற்(கு) இயை(பு)இன்றேல்; கண்என்ஆம்? …