மூத்த ஒளிப்பட ஊடகவியலாளர் கதிரவேலு ஐயா மரணமடைந்த செய்தியறிந்து பன்னாட்டுத் தமிழ்ச்செய்தியாளர் ஒன்றியத்தினராகிய நாம் வேதனை யடைந்துள்ளோம். ‪  ஆறுபதின்மங்களுக்கு மேற்பட்ட ஒளிப்பட ஊடகப்பட்டறிவைக் கொண்ட ச.கதிரவேலு ஐயாஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளை தனது ஒளிப்படங்கள் மூலம்வெளிப்படுத்தியவர். தமிழர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை தனது ஒளிப்படங்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முற்பட்டபோது சிறீலங்கா காவற்துறை நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலால் தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.   தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளையும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்கு அண்மித்தநிகழ்வுகளையும் தனது…