கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் : இணையத்தளத்தில் காணலாம்
கதிராமங்கலம் கதறல் – ஆவணப்படம் இணையத்தளத்தில் காணலாம் காவிரிப்படுகையின் கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய்-எரிவளிக் கழகத்துக்காக தமிழ்நாடு காவல்துறை பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது நாமறிந்த செய்தி! அங்கு நடந்தது என்ன என்பதையும், காவிரிப்படுகையில் எ.எ.(ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் செய்திகளுடன் தொகுத்து, “கதிராமங்கலம் கதறல்” என்ற புதிய ஆவணப்படத்தை பன்மைவெளி வெளியீட்டகம் உருவாக்கியது. ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முதல் ஆவணப்படமான “மொழிப்போர்…