உலகத் தமிழ் நாள் & பேரா.சி.இலக்குவனார் பெருமங்கலம்
தன்மானத்தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் – கதிர்நிலவன்
நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959 ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது. முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க…
‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் – கதிர் நிலவன்
‘இந்தி எதிர்ப்புப் போராளி’ சி.இலக்குவனார் நினைவு நாள் ஆவணி 18, 2004/ செப். 3, 1973 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் தமிழாசிரியர்களின்பங்கு முதன்மையானது. மாணவர்களுக்கு தமிழ்மொழி காக்கும் உணர்வையும் இந்தித்திணிப்பை எதிர்த்திடும் போர்க்குணத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள்தமிழாசிரியர்களே! மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் நடத்திய முதல் போராட்டம்தான் தமிழகமெங்கும்மாணவர்களைப் போர்க்களத்தில் இறக்கி விட்டது. அந்தக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் வைத்த முதல் ‘தீ’ தான் காங்கிரசு ஆட்சிக்குக் கொள்ளி வைப்பதில் முடிந்தது. இலக்குவனார்இந்தி எதிர்ப்புப் போருக்கு…
‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…
மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து
நஞ்சுண்டு மடிந்த முதல் “மொழிப்போர் ஈகி” கீரனூர் முத்து நினைவு நாள் 4.2.1965 ஆதிக்க இந்தி மொழிக்கு எதிராக சனவரி 25 இல் மாணவர்கள் பற்ற வைத்த சின்னத் தீப்பொறி காட்டுத் தீயாகப் பரவி தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்தது. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்க நாதனும் தங்கள் தேக்குமர உடலுக்குத் தீ வைத்து மாண்ட செய்தி கீரனூர் முத்துவை அலைக்கழித்தது. இவனுக்கு இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று என்பது உயிரோடும், உணர்வோடும் கலந்திருந்தது. 1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளித்…