வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்
வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்? வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தல் வரும் ஆடி 20/ 05.04.2019 அன்று நடைபெற உள்ளது. இங்கே முதன்மைப் போட்டி அ.தி.மு.க.விற்கும் தி.மு.க.விற்கும்தான். ஆரணி சொக்கலிங்கம் சண்முகம் ஆகிய ஏ.சி. சண்முகம், தான் தலைவராக இருந்து நடத்தும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வேட்பாளர் என்றே இவரைக் கூறலாம். எம்ஞ்சியார் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி முதலானவற்றின் மூலம் பொதுக்கல்வியும் மருத்துவக் கல்வியும் பரவுவதற்குப் பணியாற்றுகிறார். முதலில் தான் சேர்ந்திருந்த…