படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்   மன உலகை மாற்றிட முடியும்! குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு      அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.    இவ்விழாவிற்கு இராமலிங்கம்   குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.சீவா அனைவரையும் வரவேற்றார்.    கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘படித்துப் பழகு‘…