இறைவனும் இயவுளும் – பரிதிமாற்கலைஞர்
உலகப் பொருள்கள் எல்லாவற்றிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால் ‘இறைவன்’ எனவும் உள்ளும் புறமுமாகி எல்லாப் பொருளையும் இயக்குவதனால் ‘இயவுள்’ எனவும் பண்டை அறிஞர் எல்லா வல்ல முழுமுதற் பொருளின் இயல்பினை வலியுறுத்தினர். இன்னஉரு, இன்ன நிறம் என்று அறிதற்கரிதாகிய அம்முழுமுதற்பொருளின் இயல்பினை உள்ளவாறு உய்த்து உணர்ந்து வழிபடுதல் வேண்டி வேண்டுதல் வேண்டாமையின்றி நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற அச்செல்வம் பொருளைக் குறித்து வழிபடுதற்குரிய அடையாளமாக ஊர்மன்றத்திலே தறியினை நிறுத்தி வழிபட்டார்கள். இதனைக் கந்து என வழங்குவர். (கந்துதறி) மரத்தால் அமைந்த இத்தூண், நாகரிகம் பெற்று…