இனிமைத் தமிழெடுத்து இதயம்குளிர வாழ்த்துவோம் ! : கந்தையா – செயம்
ஆர்கலி உலகிடை மார்கழிப் பெண்ணாள் ஆடிமுடித்தாள் பின்அவள் அடிஎடுத்து வைத்து ” தை தை ” என நடைபோட்டு தையலவள் நடந்ததால் தைத்திங்கள் பிறந்ததோஅத் தையே தமிழ்ப் புத்தாண்டு ! தகுமிகு முத்தமிழ் முன்னோர் பத்தாயிரம் ஆண்டாய் பழக்கத்தில் கைக்கொண்ட புத்தாண்டுக் கொள்கை பொங்கிய கடல்பேரழிவில் புதைந்து போனதை விதந்தநம் சான்றோர்கள்கூடி ஆய்ந்து ஆய்ந்து அறுபதாண்டின் முதலாண்டை சிதைந்த தமிழரிடம் …