துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா
துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி. சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 / 29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர் சார்சாவில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர் (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…