இனிப்புத் தோப்பே! – ஆரூர் தமிழ்நாடன்
இனிப்புத் தோப்பே கனவுகளின் தாயகமே… கவிதைகளின் புன்னகையே வைரத் தேரே!.. கண்வளரும் பேரழகே… கால்முளைத்த சித்திரமே இனிப்புத் தோப்பே.. . நினைவுகளை அசைக்கின்றாய்… நெஞ்சுக்குள் நடக்கின்றாய்… தேவ தேவி… நின்றாடும் பூச்செடியே… உன்பார்வை போதுமடி அருகே வாடி. பார்வைகளால் தீவைத்தாய்; பரவசத்தில் விழவைத்தாய்; தவிக்க வைத்தாய்! ஊர்வலமாய் என்னுள்ளே கனவுகளைத் தருவித்தாய் சிலிர்க்க வைத்தாய். நேர்வந்த தேவதையே நிகரில்லா என்நிகரே உயிர்க்க வைத்தாய். யார்செய்த சிற்பம்நீ? எவர்தந்த திருநாள்நீ? மலைக்க வைத்தாய். உன்பிறப்பை உணர்ந்ததனால் நீ பிறக்கும் முன்பாக நான் பிறந்தேன்; என் நோக்கம்…