(திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல் :  தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15.கற்பு இயல் 122. கனவு நிலை உரைத்தல்   தலைவி, தான்கண்ட கனவு நிலைகளை, எடுத்து மொழிதல்.   (01-10 தலைவி சொல்லியவை) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு,       யாதுசெய் வேன்கொல் விருந்து? காதலர் வரவைக் கூறிய கனாத்தூதுக்கு, என்ன விருந்திடுவேன்?   கயல்உண்கண், யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்(கு),       உயல்உண்மை சாற்றுவேன் மன். கண்கள் தூங்கின், நான்வாழ்வதைக் காதலர்க்குக்…