செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி
அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி இராமதாசு பேச்சு தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில் மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான…