கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை   வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.   இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:   கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.   பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து…