காலப்பொறி படைத்தவர் தமிழரே!
காலப்பொறி படைத்தவர் தமிழரே! “யாண்டும், மதியும், நாளும், கடிகையும்” எனவரும் சிலப்பதிகார அடிகளால் நாழிகையை அளவிடும் கருவி ‘கடிகை’ என அழைக்கப்பட்டதை அறியலாம். இக்கடிகை ‘ஆரம்’ போல் கழுத்தில் அணியப்பட்ட செய்தி “கடிகை ஆரம் கழுத்தில் மின்ன” என்னும் பெருங்கதை வரியால் அறியப்படுகிறது. இக்கடிகை ஆரமே இப்பொழுது கடிகாரம் எனப்படுகிறது. மேலும், ‘கன்னல்’ என்னும் கருவி மூலம் நேரம் கணக்கிடப்பட்டதை முல்லைப்பாட்டின் மூலம் அறியலாம். நமது நாழிகை வட்டில் பிற நாட்டவராலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பொழுதைய, ஒன்றரை மணி நேர அளவுகொண்ட முழுத்தம் என்பதே…