கம்பன் புகழைப் பாடு மனமே ! – அம்பாளடியாள்
கம்பன் புகழைப் பாடு மனமே ! கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர் ! -செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள் இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் ! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும் சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர் ! அவைக்கும் அவரே அழகு ! பாட்டால் உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே…